மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணி : 15 கம்பெனி துணை நிலை ராணுவம் இன்று தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல் கட்டமாக 15 கம்பெனி துணை நிலை ராணுவப் படையினர் இன்று தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  2024  மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 200 கம்பெனி துணை நிலை ராணுவம் அனுப்பப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக 15 கம்பெனி துணை நிலை ராணுவப் படையினர் இன்றுவர உள்ளதாகவும், தொடர்ந்து வரும் 7-ம் தேதி மேலும் 10 கம்பெனி படையினர் வர உள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இவர்கள் பதற்றமான பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Night
Day