பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

சாகசத்திற்காக பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலை இருப்பதாகவும், மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு என பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதரார் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது என்று கூறினர். பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருவதாகவும், பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.

படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் வருவதாக கூறிய நீதிபதிகள், நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை என்றும் மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள் அதையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day