பெண்கள் குண்டுக்கட்டாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி நடைபெற்ற ஒருநாள் கடையடைப்பு போராட்டத்ததின் போது, திடீரென பொதுமக்கள், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாறைக்குழிக்குள் டன் கணக்கில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், திடீரென சாலையில் அமர்ந்தனர். அப்போது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கிராம மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day