பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்போடு சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடப்பாண்டில் பூண்டு விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், உத்தரப்பிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக 100 முதல் 125 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பூண்டு, இன்று 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 70 சதவீதம் பூண்டு வரத்து குறைந்த நிலையில், விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

varient
Night
Day