எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, கடலூர் மாவட்டக் கழகம் சார்பில் கடலூர் சுத்துகுளத்தில் உள்ள அருள்மிகு வனபத்ர காளியம்மன் கோயிலில் ஸ்ரீ யோக வாராகி அம்மனுக்கு நாக சண்டி யாகம் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி அமைய வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. கடலூர் மாவட்ட கழக நிர்வாகி சுரேஷ் என்ற ஆர் முத்துகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், கழக நிர்வாகிகள் திண்டிவனம் சேகர், வேளச்சேரி சின்னதுரை, அரியலூர் நடராஜன், செங்கல்பட்டு சூர்யா, விக்கிரவாண்டி சிலம்பரசன், அரசகுழி கிரகோரி, திருக்கோவிலூர் சரவணன், காட்டுமன்னார்கோயில் அனுசுயா மன்னர்சாமி, நத்தமூர் ஏழுமலை, நாராயணன், ஞானவேல் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை வழங்கி மகிழ்ந்தனர்.
சென்னை போரூர், ஆலப்பாக்கத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி, அன்னதானம் பரிமாறி சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினர். இதில் கழக நிர்வாகிகள் வினோத்ராஜ், ஆலப்பாக்கம் ஜீவானந்தம், ஆறுமுகம், அப்துல் காதர், ராஜா, பஷீர், ஜெயசீலன், சம்சதீன், மஞ்சுளா, LIC திலகர், நாராயணன், பரமசிவம், சண்முகராஜ், அலாவுதீன், அமுதா, காஞ்சனா, வெங்கடேஷ், சாந்தகுமார், ஜெயராமன், சாம்சன், ஆறுமுகம், நியாஸ், குணசேகரன், சுபான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் புறநகர் பகுதிகளான கவுந்தப்பாடி, பெரியாக்கவுண்டவலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கழகத் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி சின்னம்மாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
அதேபோன்று நிச்சாம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு கழகத் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில், கழகப் பொதுச்செயலளார் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாளையொட்டி, கழக நிர்வாகிகள், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். புரட்சித்தாய் சின்னம்மா நலமுடன் வாழவேண்டி அர்ச்சனைகள் செய்தனர். கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கழக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகி காசிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள திருமுருகநாத சுவாமி திருக்கோயிலில், கழக நிர்வாகி கணேசமூர்த்தி தலைமையில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி சின்னம்மாவின் பிறந்தநாளை உற்சாகமுடன் கொண்டாடினர். திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில், சின்னம்மாவை வாழ்த்தி 'அஇஅதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா' என்றும், 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை கழக நிர்வாகிகள் ஒட்டி இருந்தனர்.
புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகராஜா கோயிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு கழக நிர்வாகி ஐயப்பன் தொண்டர்களுடன் சேர்ந்து பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். சின்னம்மா நீடூழி வாழ வேண்டும் என்றும், அம்மா விட்டு சென்ற திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தொண்டர் சுகுமாறன் என்பவர், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றிய கழகம் சார்பில் கழக நிர்வாகி வள்ளிநாயகம் தலைமையில் பட்டாசு வெடித்து புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து களப்பாகுளம் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மா நலமுடன் வாழ வேண்டி கழக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து கழக நிர்வாகிகள் பொங்கல் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிகளில் கழக நிர்வாகிகள் வள்ளிநாயகம், பூசைத்துரை, திருப்பதி, மீன்துள்ளி செல்லத்துரை, அழகு தமிழ்ச்செல்வி, மகாலட்சுமி, சுப்புலட்சுமி செல்வராணி, பாரதி தேவி S.முத்துலட்சுமி, வேல்மையில் நாச்சியார், P முத்துலட்சுமி, கோட்டை களஞ்சியம், சண்முக ஜெயா, சண்முகப்பிரியா, குணசுந்தரி, கோகிலா, ஜெயஜோதி, சீதாலட்சுமி, ராஜலட்சுமி, அபிநயா, பூவிதா, கோபிகா, கோகிலா, மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டி, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கழக நிர்வாகி மணிகண்டன் தலைமையில் வடசென்னை மாவட்டம் முழுவதும் கொளத்தூர் பகுதி நிர்வாகிகள், வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் தமிழரசன்,
கூத்தரசன், ராஜா செல்வராஜ், அம்மாகுளம் குமார், பூபதி, மோகன், மகேஷ், இப்ராஹிம் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில், சின்னம்மாவை வாழ்த்தி கழக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 'அஇஅதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா' என்றும், 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி, கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கழக நிர்வாகி கே.டி. ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் முழுவதும் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். ஆகஸ்ட் 18ல் பிறந்தநாள் கொண்டாடும் தங்களின் வழிகாட்டியே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று குறிப்பிட்டு நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் கடலாடி, சாயல்குடி பகுதிகளில் கழக நிர்வாகிகள் சித்திரகுமார் மற்றும் கோமதி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவுடன் 2026ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.