புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71-வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள பழைமை வாய்ந்த திருமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கழகத் தொண்டர்  ஜனா என்பவரது ஏற்பாட்டில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். இலஞ்சியில் அமைந்துள்ள ஆரம்பஜோதி நடுநிலைப்பள்ளியில் கழக நிர்வாகிகள் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் கைகளை தட்டி புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சின்னம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் முத்து பிரகாஷ், எஸ்.எம். துரை, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா நலமுடன் வாழவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

தொடர்ச்சியாக குற்றாலம் பராசக்தி பீடத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் சன்னதியிலும் கழக நிர்வாகிகள் சின்னம்மாவின் பெயருக்கு அர்ச்சனைகள் செய்து சின்னம்மா பல்லாண்டு காலம் வாழவேண்டி பிரார்த்தனை செய்தனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு புரட்சித்தாய் சின்னம்மா நீடூழி வாழ வேண்டி முருகப்பெருமானுக்கு உகந்த சண்முகா அர்ச்சனையும் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருக வேண்டுதல் செய்தனர். பின்னர் கழகத் தொண்டர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கழக நிர்வாகிகள் விமரிசையாக கொண்டாடினர். கழக நிர்வாகி மாரியப்பன் தலைமையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு பச்சை பட்டு சாத்தி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகம் ஒன்றுபட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் மலரவும், புரட்சித்தாய் சின்னம்மா நலமுடன் வாழவும் வேண்டியும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வேண்டுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கழக நிர்வாகிகள் செல்லச்சாமி, பாலாஜி, மாரிமுத்து, மைதீன் கான், மதன், பிரம்மன், முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரிய மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சின்னம்மா நலமுடன் வாழவேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அஇஅதிமுக பொதுசெயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெய சக்தி கணபதி ஆலயத்தில் எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். சின்னம்மா நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழவும், சின்னம்மா தலைமையில் கழகம் ஒன்றிணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு நன்மை செய்யவும் வேண்டி விநாயகப் பெருமானை வழிபட்டு மனமுருக வேண்டுதல் செய்தனர். 

தேனி மாவட்டம் போடியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கழக நிர்வாகிகள் உற்சாகமுடன் கொண்டாடினர். அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் RTG குமரன், பாறை கண்ணன், கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி அமையவும், சின்னம்மா நீடூழி வாழவும் வேண்டி சென்றாய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கழக நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்க் முருகேசன் உட்பட திரளான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவில், பரம்பரை ஆதீனம் எம்.எச். ஹாஜா சம்சுதீன் சாஹிப் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புரட்சித்தாய் சின்னம்மா நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழவும், 2026ம் ஆண்டு சின்னம்மா தலைமையில் பொற்கால ஆட்சி அமைந்திடவும் வேண்டி சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இதில் முகமது உசேன் சாகிப் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





Night
Day