புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியில் 7 சமூக ஆர்வலர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் விருது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை நிறுவன கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அகில பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை பொதுச்செயலாளர் சதீஷ்குமார், தமிழ்நாடு மண்ணுரிமை கட்சியின் மாநில பொருளாளர் சாகின் பாத்திமா தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

Night
Day