புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாள் - மாணவர்களுடன் கொண்டாடிய கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71-வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிமுக தொண்டர்கள் சார்பில் நடைபெற்ற பூஜையில், சின்னம்மா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியம், தமிழக முதலமைச்சராகி தமிழகத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்ய பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியில் 7 சமூக ஆர்வலர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் விருது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை நிறுவன கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அகில பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை பொதுச்செயலாளர் சதீஷ்குமார், தமிழ்நாடு மண்ணுரிமை கட்சியின் மாநில பொருளாளர் சாகின் பாத்திமா தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளையொட்டி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள், தனது குடும்பத்தினருடன் சென்று சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி சின்னம்மாவின் தலைமையில் கொண்டு வரவும் பிரார்த்தனை செய்தார்.

ஈரோடு மாவட்டம் புறநகர் பகுதிகளான கவுந்தப்பாடி, பெரியாக்கவுண்டவலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கழகத் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி சின்னம்மாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.அதேபோன்று நிச்சாம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு கழகத் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 

Night
Day