புரட்சித்தாய் சின்னம்மா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் நரிக்குறவ இன மக்களுக்‍கு, கழக நிர்வாகிகள் பிரியாணி மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அஇ​அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள நரிக்குறவ இன மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று, நரிக்குறவ இன மக்களுக்‍கு வேட்டி, சேலை மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் நீலார், ஏழுமலை, சுதாகர் உள்ளிட்ட கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

varient
Night
Day