புரட்சித்தாய் சின்னம்மாவின் தொடர் அழுத்தம் - அம்மா உணவக ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியத்தை சென்னை பெருநகர மாநகராட்சி உயர்த்தியுள்ளது.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற நலத்திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம் திட்டம். ஏழை எளிய உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த இந்த திட்டத்தால் ஏராளமான மக்கள் பயனடைந்தனர். குறிப்பாக கொரோனா காலத்தில் அம்மா உணவகத்தின் சேவை மிகப்பெரிய பங்காற்றியது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மிகச்சிறந்த திட்டமான அம்மா உணவகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமலும், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமலும், கட்டமைப்பை மேம்படுத்தாமலும் அம்மா உணவகங்களை முடக்கும் செயலில் இறங்கியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மா உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இருக்கும் 392 அம்மா உணவகங்களில்  பணிபுரியும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயில் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day