புரட்சித்தலைவரின் 37-வது நினைவு நாள் - கழகத்தினர் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உத்தரவின்படி,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், புரட்சித்தலைவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து 300 நபர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானமும் அவர் வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

varient
Night
Day