எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.