பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இம்மாத இறுதியில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பில், வரும் 27, 28ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Night
Day