பாஜக கூட்டணி : அமமுகவுக்கு தேனி மற்றும் திருச்சி மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அமமுக-வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக தமிழகத்தில் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு திருச்சி மற்றும் தேனி ஆகிய மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல் பாஜக கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day