தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக நேரடி போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக சார்பில் தமிழகத்தில் தென் சென்னை வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும், கோவையில் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் இருந்து மக்‍களவை தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
இதன்படி பாஜக சார்பில் தமிழகத்தில் தென் சென்னை வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும், சென்னை மத்திய தொகுதியில் வினோஜ் செல்வமும் போட்டியிடுகின்றனர். கோவையில் மாநிலத்தலைவர் அண்ணாமலையும், வேலூரில் கூட்​டணி கட்சியை சேர்ந்த டாக்‍டர். ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மனும் நீலகிரி தனித்தொகுதியில் மத்திய இணையமமைச்சர் டாக்‍டர் எல் முருகனும் போட்டியிடுகின்றனர். பெரம்பலூரில் கூட்​டணி கட்சியை சேர்ந்த பாரிவேந்தரும், திருநெல்வேலியில் நயினார் நா​கேந்திரனும் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்‍கப்பட்டு உள்ளது.

varient
Night
Day