பழனியில் ஓடும் பேருந்தில் சக்கரம் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் அலறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தீர்த்தக்கவுண்டன் வலசு நோக்கி நகர பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வேப்பன்வலசு அருகே வந்தபோது, திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயங்கும் பேருந்துகளை ஆய்வு செய்து இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day