"எங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும்" : சோனியா காந்தி நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும் என்றும் தங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்‍களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சோனியாகாந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும் என்றும் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

varient
Night
Day