பராமரிப்பு பணிகள் : சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து - மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணி காரணமாக விடுமுறை தினங்களில் ரயில் சேவை குறைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடங்களில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

varient
Night
Day