பணியிடங்களில் பெண்களுக்கு தொல்லை - நீதிபதி வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை; அங்கு பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி மோகன கிருஷ்ணக்கு எதிராக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி,  பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுகமான சமூக பிரச்னையாகவும் உள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக 60 நாட்களில் அறிக்கை வேண்டும் எனவும் அதனடிப்படையில் 4 வாரங்களில் தண்டனை குறித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

varient
Night
Day