நெல்லை: சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடிப்படை வசதிகள் கோரி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில், புதிய கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் எதுவும் அமைக்கப்படாமல் பழைய கட்டிடங்களிலேயே வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அவதியடைந்து வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி, அரசு சித்த மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day