நூலைப் போல சேலை... மு.க.ஸ்டாலினைப் போல் கே.என்.நேரு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் NDA ௯ட்டணி அமோக வெற்றி பெறும் என உளறி அங்கிருந்தவர்களை குழப்பமடைய செய்தார். இணையவாசிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ள அமைச்சரின் உளறல் பேச்சு குறித்து சற்று விரிவாக காணலாம்...

நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லாம். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, தேர்தல் பரப்புரை ஏற்பாடுகள் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறுவதற்கு பதில் NDA  கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கடந்த 2 இரு தினங்களுக்கு முன்புதான் மக்களவை தேர்தலுக்கான திமுக அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது என்பதற்கு பதிலாக கொண்டுவரப்படும் என உளறியது கேலிக்கூத்தாக அமைந்தது.

முதலமைச்சரை தொடர்ந்து தற்போது அமைச்சர் கே.என்.நேருவும் உளறி கொட்டியிருப்பது தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Night
Day