நீலகிரி : கிணற்றில் விழுந்த யானை குட்டி 10 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டியானையை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதி அருகே நேற்றிரவு காட்டு யானைகள் உலா வந்த நிலையில், கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று அருகிலிருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. யானைகள் பிளிரலை கேட்டு அச்சமடைந்த கிராமத்தினர் வந்து பார்த்தபோது, குட்டியானை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் வெளியே வர முடியாமல் தவித்தது. கிராமமக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை விரட்டிவிட்டு கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை ஜேசிபி உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இரண்டு ஜேசிபிகள் வரவழைக்கப்பட்டு கிணற்றின் அருகிலேயே குழிதோண்டி குட்டியானை வெளியே வர பாதை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் குழியிலிருந்து வெளியே வரும் குட்டியானையின் பிடிமானத்திற்கு கிணற்றை சுற்றி கயிறு கட்டப்பட்டது. இந்நிலையில் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குட்டியானை பத்திரமாக மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டது.

நள்ளிரவில் கிணற்றுக்குள் விழுந்து 11 மணி நேரத்திற்கு பின்பு வெளியே வந்த குட்டியானை கிணற்றிலிருந்து மேலே வந்தவுடன் வனப்பகுதிக்குள் குதித்து ஓடியது.

Night
Day