நீலகிரி : அவலாஞ்சியில் ஒரே நாளில் 20.7 செமீ மழைப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 வது நாளாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளிலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 20 புள்ளி ஏழு சென்டி மீட்டர் மழையும், பார்சன்வேலி பகுதியில் 10 புள்ளி ஆறு சென்டி மீட்டர் மழையும், அப்பர் பவானி பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று சேரன் கோடு, எமரால்டு, தேவாலா உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமாக மழை பெய்துள்ளது.

Night
Day