எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெரம்பலூர் மாவட்டக் கழக எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளரும், முன்னாள் வேப்பந்தட்டை ஒன்றிய கழக செயலாளரும், ஜெயா தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட நிருபர் இளவரசன் அவர்களின் தந்தையுமான பிரம்மதேசம் ஆர். பூவராகசாமி அவர்கள் மறைவுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெரம்பலூர் மாவட்டக் கழக எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளரும், முன்னாள் வேப்பந்தட்டை ஒன்றிய கழக செயலாளரும், ஜெயா தொலைக்காட்சியின் திருச்சி மாவட்ட நிருபர் இளவரசன் அவர்களின் தந்தையுமான பிரம்மதேசம் ஆர். பூவராகசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக கூறியுள்ளார்.
தனது தந்தையை இழந்து வாடும் இளவரசன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.