நாமக்கல்: கல் குவாரியை இயக்க விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல் குவாரிகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்காரம்பாளையம், எளையாம்பாளையத்தில் இயங்கி வந்த 5 கல் குவாரிகளின் அனுமதி கடந்த மாதம் 17-ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையிலும், சட்ட விதிகளை மீறி மீண்டும் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கல் குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், அதிக ஆழத்தில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதால் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனவே கல்குவாரிகளை நிரந்தரமாக இயக்க தடைகோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நெய்காரம்பாளையம், எளையாம்பாளையம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day