நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் மறைவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

திரு.செல்வராஜை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய அவரது கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day