நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ள இல.கணேசன், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக உள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த இல.கணேசனுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் இல.கணேசன் உடல்நிலை குறித்த அப்போலோ மருத்துவமனை சார்பாக  அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day