எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு விரைவில் வருகைத்தர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதனை ஏற்று அவர் இந்தியாவுக்கு வர சம்மதம் தெரிவித்தாக தெரிகிறது. இதனை, அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அஜித் தோவல் உறுதிப்படுத்தி உள்ளார்.
இம்மாத இறுதியில் பிரதமர் மோடி, சீனா செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரஷ்யா அதிபர் புடினின் இந்திய பயணம் அமையும் என தெரிகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்துள்ள நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கம் விதமாக ரஷ்யா அதிபரின் இந்திய பயணம் அமைய உள்ளது. இந்த பயணத்தின்போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், பிரம்மோஸ் போன்ற ஏவுகணை கொள்முதல் குறித்தும் பிரதமர் மோடியும், ரஷ்யா அதிபர் புடினும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.