நடக்கவிருந்த இரண்டு திருமணங்கள் நிறுத்தம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு திருமணங்களை நிறுத்தியதால் மாப்பிளை வீட்டார் மீது பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மீனவர் நரேஷ். இவரது மகளை பக்கத்து ஊரான சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவருக்கு நிச்சயம் செய்து திருமண நாள் குறித்து பத்திரிகை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் சாதி பிரச்சனை குறுக்கிடுவதாக கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதேபோல அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு மணப்பெண்ணையும் சிறுவயலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு பேசி முடித்த நிலையில் திருமணத்தை நிறுத்த சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இரு பெண் வீட்டாரும் மாவட்ட எஸ்பி இடம் புகார் அளித்துள்ளனர்.

varient
Night
Day