நகர்புற வாரிய குடியிருப்பில் லிஃப்டில் சிக்கிய பெண்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மூலகொத்தளதில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் குடியிருப்பு லிப்டில் சிக்கிக்கொண்டவர்களை பொதுமக்கள் போராடி மீட்டனர்.

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் 10 மாடிகள் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டு வாரிய  குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள லிப்ட்டில் நீண்ட நாட்களாக கோளாறு இருந்து வருவதாக குடியிருப்புவாசிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 பெண்கள் உட்பட 3 பேர் லிப்டில் பயணித்த போது, திடீரென லிஃப்ட் பழுதாகி நின்றது. இது தொடர்பாக  தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வர காலதாமதமானதால் பொதுமக்களே லிப்டின் கதவுகளை திறந்து உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர்.

Night
Day