தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 73வது பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்துச்செய்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர், பத்மபூஷன் விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
அன்பு சகோதரர் விஜயகாந்த் தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து, அவர் ஆற்றிய அரும்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day