தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
பள்ளி ஆண்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரபல பிரியாணி கடை உரிமையாளர், 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிரியாணி விருந்தளித்து மகிழ்ந்தார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உப்புக்கோட்டை கிராமத்தில், அரசு உதவி பெறும் பச்சையப்பா துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியின் 74வது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற சேலம் ஆர்.ஆர். பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கு, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், தனது கடையில் இருந்து பிரியாணி வரவழைத்து, மாணவர்களுக்கு விருந்தளித்தார். கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து சாப்பிட்ட அவர், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக கூறினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...