தென்மேற்கு பருவமழை துவங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவ மழை, மே 20ம் தேதி வாக்கில், அந்தமான் கடல் பகுதியில் துவங்கும். இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் ஜூன் 1ல் பருவமழை துவங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கேரளாவில் வரும் 27ம் தேதி முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Night
Day