தென்காசி: முள்ளிமலை பொத்தையில் தீயை அணைக்கும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முள்ளிமலை பொத்தையில் திடீரென ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடையம் அருகே உள்ள முள்ளிமலை பொத்தை என்ற சிறிய மலையில் கரடி, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அறிய வகை செடிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படும் நிலையில், நேற்று இரவு அங்கு திடீரென தீ பற்றியது. தீ மளமளவென பரவிய நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தீ வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களின் வேலையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day