தூய்மை பணியாளர்கள் 13வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பணி நிரந்தரம் கோரி தற்காலிக தூய்மை பணியாளர்கள் 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்தும், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு கடந்த 1ம் தேதி முதல் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் விளம்பர திமுக அரசு மேற்கொண்ட 6 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில்,
உள்ளாட்சி துறைக்கு அமைச்சர் இருக்கும் போது இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரான சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

13 நாட்களாக போராடி வரும் தங்களை வந்து பார்க்காத நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவை காணவில்லை என்றும் அவரை முதலமைச்சர் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டள்ள தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தங்களின் கோரிககைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தனர். 

Night
Day