கைதான திமுக மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி 150 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்த வருகிறது. இவ்வழக்கில், முன்னதாக சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தவின் பேரில் டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், கண்ணனிடம் அளித்த வாக்குமூலத்தில், மாநகராட்சியின் முக்கிய நிர்வாகிகள், 3 கவுன்சிலர்கள், ஒரு மண்டலத் தலைவரின் கணவர் மற்றும் அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய உதவி ஆனையர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, விசாரணை மேற்கொண்டதில் மேயரின் கணவர் பொன் வசந்தின் பெயர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமாரையும், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தையும் சென்னையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

varient
Night
Day