திருவண்ணாமலை: தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் புதிய திட்டத்தில், நீங்கள் நலமா என முதலமைச்சர் கேட்பது போலும், அதற்கு விவசாயி தொலைபேசியில் நாங்கள் நலமில்லை என்று நூதன முறையில் நடித்துக் காட்டி செய்யாறில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொது மக்களுக்கு 40% தரமற்ற இலவச பொருட்கள் வழங்குவதாகவும், அதனை நிறுத்திவிட்டு, மாதம் 5ஆயிரம்  வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தினால் ஏழை மக்களின் ஆண்டு வருமானம் அதிகரிக்கும் என வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசின் "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டத்தின் கீழ் மக்களிடம் தொலைபேசி மூலம் முதல்வர் கேட்பது போலும், அதற்கு விவசாயிகள் நாங்கள் நலமில்லை என்றும் நடித்துக் காட்டியும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

varient
Night
Day