தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் திடீரென மெகா பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென மெகா பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்திற்கு கீழே உள்ள பாதாள சாக்கடையில் குழாய் வெடித்து சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பாதாள சாக்கடையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு கழிவுகளை முறையாக அகற்றாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...