எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை திமுக மேயர் ராமநாதனை கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது திமுகவை சேர்ந்த 12 வது மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ், கடந்த மூன்று மாதமாக கூட்டம் நடத்தாமல், இப்போது கூட்டம் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு ஆறு நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டிய அஜெண்டாவை கடந்த 2 ஆம் தேதி ஆணையர் வழங்கியதால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைதொடர்ந்து மேயரும் - ஆணையரும் கூட்டத்தை ரத்து செய்ய முடியாது கூறியதால், திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் - மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திமுக மேயரை கண்டித்து திமுக எதிர்ப்பு உறுப்பினர்கள் 19 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது காவலர்கள் உள்ளே வந்து இருதரப்பையும் சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் திமுக மேயர் ராமநாதனை கண்டித்து ஆணையர் அலுவலகம் முன்பு மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.