திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கழகத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்யவும் கோரி, கழக நிர்வாகி எல்கேஎம் பி.வாசு ஏற்பாட்டில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கோசமிட்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர், முன்னாள் அரசு கொறடா திருத்தணி பி.எம். நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், கழக நிர்வாகிகள் பூவை கந்தன், எல்லாபுரம் L ரஜினி, ஜெ குமார் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் மனு அளித்தனர்.

Night
Day