திமுக அமைச்சர்கள் பொன்முடி - செஞ்சி மஸ்தான் இடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மேடையிலேயே திமுக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மற்றும் விழுப்புரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் மஸ்தான் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்ததால் அமைச்சர் பொன்முடி, கடுப்பாகிப் போனார். இதனால் அமைச்சர் மஸ்தான் பேசி முடித்ததும் அவரிடம் இருந்த மைக்கை அமைச்சர் பொன்முடி வெடுக்கென பறித்தார். இதைத் தொடர்ந்து மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. திமுக அமைச்சர்களுக்கு இடையேயான இந்த மோதலால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது

varient
Night
Day