எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் மக்களவைதேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவிற்குள் உட்கட்சி பூசலும் வலுத்து வருகிறது. அத்துடன், திமுகவினரின் தேர்தல் செயல்பாடுகளால் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கடலூர் நெல்லிகுப்பத்தில் திமுக நகர செயலாளருக்கு தெரியாமல் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் ஆலோசனை நடத்தியதால் கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, நகர செயலாளர் மணிவண்ணனுக்கும், நகர மன்ற தலைவி ஜெயந்தியின் கணவர் ராதா கிருஷ்ணனுக்கும் இடையே உட்கட்சி பூசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, நகர செயலாளர் மணிவண்ணனுக்கு தெரியாமல் கூட்டம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்களுக்கும், ராதா கிருஷ்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய அமைச்சர் கணேசனே கூட்டத்தில் இருந்து நழுவி சென்றது திமுக தொண்டர்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தி உள்ளது.