அதிமுக ஒன்றிணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து வழிநடத்தினால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி பகுதியில் மூக்கையா தேவரின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒன்றரை கோடி தொண்டர்களின் மனக்குமுறலை மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாகவும், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.

Night
Day