திமுகவினர் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய கொடிக்கு பதிலாக சீன கொடியுடன் உள்ள ராக்கெட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமரை வரவேற்கும் விதமாக பிரபல நாளிதழில் திமுக அளித்த விளம்பரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. திமுக நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்களுக்கு பின்னால், இந்தியாவின் தேசிய கொடிக்கு பதிலாக சீன நாட்டின் கொடியை குறிக்கும் வகையில் உள்ள ராக்கெட்டின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்திய கொடிக்கும், சீன நாட்டின் கொடிகளுக்குமே வித்தியாசம் தெரியாமல் விளம்பரம் அளித்துள்ள திமுக நிர்வாகிகளின் செயல், விளம்பர அரசு என்ற பெயரை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

varient
Night
Day