தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
தருமபுரி அருகே குடிநீர் வேண்டி நடைபெற்ற சாலை மறியலில் பெண் ஒருவர் மடிப் பிச்சை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பைநல்லூர் அடுத்த சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுதால் மக்களுக்கு இரண்டு வாரத்துக்கு மேலாக குடிநீர் வழங்காததால் தண்ணீரின்றி தவிக்கின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குடியிருப்பு வாசிகள் அரூர் - கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் குடிநீர் வழங்க வலியுறுத்தி மடிப்பிச்சை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...