தரமான சிமெண்ட் சாலையை உடைப்பதற்கு எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தரமாக உள்ள சிமெண்ட் சாலையை உடைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக தரமாக உள்ள சிமெண்ட் சாலையை உடைத்து அகற்ற சாலைப் பணியாளர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிமெண்ட் சாலையை உடைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தரம் இல்லாத சாலைகளை அகற்றி புதிய சாலைகள் அமைப்பதை விட்டுவிட்டு தரமாக உள்ள சிமெண்ட் சாலையை அகற்றுவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Night
Day