தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளது - திருமாவளவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆணவ படுகொலைகளை வேடிக்கை பார்க்காமல் அதை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

நெல்லை கவின் படுகொலைக்கு நீதி கேட்டும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு தனி சட்டம் இயற்ற கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், தற்போது தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டினார். கவின் ஆணவ படுகொலையில் சிபிசிஐடி விசாரணை நியாயமாக இருக்காது என்பதால் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Night
Day