தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். 

கடந்த 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற்று 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை காலம் முடிந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடைத்தாள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், மேலும் 2ம் பருவத்துக்காக பாட நூல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Night
Day