தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 23ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...