தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மே 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. 2 நாட்களுக்கு முன்னதாக கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை நிலவரம் மாறி மிதமான மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

இந்தநிலையில் வரும் 5ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

Night
Day